மோசுல் வெற்றி அறிவிக்கை உடனடியாக நிகழும் - அமெரிக்க தளபதி

ஈராக்கிய அதிகாரிகள் மோசூல் நகரை மீண்டும் கைப்பற்றிய இறுதி வெற்றியை உடனடியாக அறிவிக்க உள்ளனர் என்று அமெரிக்க தளபதி கூறினார்.
மோசுல் வெற்றி அறிவிக்கை உடனடியாக நிகழும் - அமெரிக்க தளபதி
Published on

வாஷிங்டன்

தளபதி ராபர்ட் சொஃப்கே பாக்தாத்திலிருந்து தொலைபேசியில் கூறும்போது, அறிவிக்கை உடனடியானது என்றார். அது இன்றா அல்லது நாளையா என்று நான் ஊகிக்க விரும்பவில்லை ஆனால் அது வெகு விரைவில் அது நிகழும் என்றர்.

ஐஎஸ் போராளிகள் மிகச் சிறிய பரப்பிலிருந்தே போரிட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் தங்களது தாடிகளை மழித்துக் கொண்டு மக்களோடு மக்களாக வெளியேறுகின்றனர். வேறு சிலர் மனித குண்டுகளாக மாறி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண் தற்கொலைப்படையினர் இடம் பெயரும் மக்களின் மத்தியில் தங்களை அழித்துகொள்கின்றனர்.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலை விடுவிக்கும் போர் அக்டோபர் 16, 2016 அன்று துவங்கியது. அமெரிக்க ஆதரவு ஈராக்கிய படைகள் தாக்குதலைத் துவங்கினர். தாங்கள் வெளியேறும் முன்பு கண்ணி வெடிகளை அனைத்து இடங்களிலும் ஐஎஸ் படையினர் புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

சோஃப்கே மேலும் கூறுகையில் ஐஈடி வெடிகளை அனைத்து இடங்களிலும் பொருத்திவிட்டும் சென்றுள்ளனர் என்றார்.

இந்த வெற்றி 2014 ஆம் ஆண்டில் அனைத்து இடங்களிலும் ஐஎஸ் படையினரால் நொறுக்கப்பட்ட ஈராக் படையினருக்கு கொண்டாட்டத்தை கொடுக்கக்கூடியது என்றார் சோஃப்கே. அவர் முத்தாய்ப்பாக, மோசூல் போர் நமது வாழ்நாளில் எந்தவொரு நவீன ராணுவமும் நிகழ்த்தது. அதற்கு இணையான ஒன்றைக்காண உலகப்போர் இரண்டின் காலத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com