கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர்.
கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி
Published on


* ஐ.நா. சபை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதனால், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் அறிவித்துள்ளார். கூட்டங்கள் ரத்து, அரசுமுறை பயணங்கள் குறைப்பு, ஏ.சி. பயன்பாடு குறைப்பு போன்ற நடவடிக்கைகள், மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

* வியாழன் கிரகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய 2011-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்தது. வியாழனின் வடதுருவத்தை ஆய்வு செய்து வரும் ஜூனோ என்ற அந்த விண்கலம், வியாழனில் சுழலும் மேகங்களை படம் பிடித்து அனுப்பி உள்ளது.

* ஈரான் நாட்டின் அத்துமீறலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பதற்காக, சவுதி அரேபியாவில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரையன் ஹுக் தெரிவித்தார்.

* உள்நாட்டு சண்டை நடந்து வரும் கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு வந்து கொண்டிருந்த ஒரு சிறிய படகு, பசிபிக் கடல் பகுதியில் கவிழ்ந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அடைக்கலம் தேடி வந்தவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com