

சின்சினாட்டி
உலகின் இரண்டாம் நிலை வீரரான சிமோனா ஹாலெப்பை 6-1, 6-0 என்ற கணக்கில் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் மட்டுமே நீடித்தது. உலகத் தர வரிசையில் முகுருசா நான்காம் இடத்தில் இருக்கிறார்.
இந்த வெற்றி மூலம் ஹாலெப்பிற்கு எதிரான ஆட்டங்களில் 3-1 என்ற கணக்கில் முகுருசா முன்னிலை வகிக்கிறார். இத்தோல்வி மூலம் ஹாலெப் உலகின் முதல் நிலை வீரராக ஆகும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளார். கரோலினா ள்பிஸ்கோவா முதல் நிலை வீரராக விளங்கி வருகிறார்.