கனடா: கூட்டத்திற்குள் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு என தகவல்

கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒட்டாவா,
கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைசை சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சாலையோரம் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






