பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் உடல்நிலை பாதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் உடல்நிலை பாதிப்பு
Published on

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷாரப் (வயது 75). இவரது உடல்நிலை இன்று மோசமடைந்து உள்ளது. இதனை அடுத்து அவர் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவர் யாரையும் சந்திக்க கூடாது அல்லது யாருடனும் பேச கூடாது என கூறப்பட்டு உள்ளது. முஷாரப் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து துபாயில் வசித்து வருகிறார். அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவர் பாதுகாப்பு மற்றும் உடல்நிலையை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது நரம்பு மண்டலம் பலவீனமடைந்தது. அவர் எழுந்து நிற்க மற்றும் நடக்க அதிக சிரமப்பட்டார்.

அவர் மீது அரசியலமைப்பினை தற்காலிக ரத்து செய்த குற்றத்திற்காக தேசத்துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. உடல்நிலையால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் சமீபத்தில், சிறப்பு நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 12ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com