

கொழும்பு,
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிவிலகக்கோரி அந்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ராப் பாடகரான ஷிராஸ் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் போராட்டக்களத்தில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராப் பாடகர் ஷிராஸ் மறைவிற்கு பலரும் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.