அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்

ரோபோ டாக்சி அறிமுகம் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெறும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்
Published on

வாஷிங்டன்,

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி பொது மக்கள் பயன்படுத்த ரோபோ டாக்சி அறிமுகப்படுத்தபடும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டெஸ்லா நிறுவனத்தின் சுய- ஓட்டுநர் ரோபோ டாக்சியில் பொதுமக்களுக்கு சவாரிகளை 22-ந்தேதி முதல் தற்காலிகமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ரோபோ டாக்சி அறிமுகம் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெறும் என்றார். மேலும் எலான் மஸ்க் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் ஆஸ்டின் நகர சந்திப்பில் ரோபோ டாக்சி கார் டிரைவர் இல்லாமல் திரும்புகிறது. அந்த காரில் ரோபோடாக்சி என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த கார்களில் முழு சுய ஓட்டுநர் என்ற டெஸ்லாவின் மேம்பட்ட ஓட்டுநர் உதவி மென்பொருள் பயன்படுத்தப் படுகிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது சுய-ஓட்டுநர் வாகனங்களை ஆஸ்டினில் உள்ள சாலைகளில் சோதித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com