இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை; பதிவு செய்யாத மதரசாக்களை மூடவும் திட்டம்

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை; பதிவு செய்யாத மதரசாக்களை மூடவும் திட்டம்
Published on

இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பெண்கள் பர்தா அணிய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் திட்டம் ஒன்றை இலங்கை அரசு எடுத்துள்ளது. இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ள பொது பாதுகாப்புத்துறை மந்திரி சரத் வீரசேகரா, இதற்கான ஒப்புதலை பெறுவதற்காக கேபினட் மந்திரிகள் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை இந்த பர்தா ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.இதைப்போல பதிவு செய்யப்படாத மற்றும் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றாத 1,000-க்கும் மேற்பட்ட மதரசாக்களை மூடவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக வீரசேகரா தெரிவித்து உள்ளார்.பர்தாவுக்கு தடை மற்றும் மதரசாக்களை மூடுவதற்கு அரசு எடுத்துள்ள முடிவு இலங்கை முஸ்லிம்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com