

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76,398 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 78 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கையும் 1,621 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனா வைரஸ் போகாது. நாம் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் வாழவும் முடியும் என்று அவர் கூறினார்.