’எனது மகனின் தந்தை அடுத்த பிரதமர்’ இம்ரான் கானுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி

என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார் என இம்ரான் கானுக்கு வாழ்த்து கூறி உள்ளார் முன்னாள் மனைவி. #PakistanElection2018 #ImranKhan #Jemima
’எனது மகனின் தந்தை அடுத்த பிரதமர்’ இம்ரான் கானுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி
Published on

லண்டன்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை.

தற்போது இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இன்சாப் கட்சி 120 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சி எப்படியும் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கான் பிரதமராவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்டு ஸ்மித் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பின்னர், அவமானங்கள், தடைகளை தாண்டி பல்வேறு தியாகங்கள் செய்து என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார். இது விசித்திரமான ஒரு பாடம், இப்போது அரசியலில் முதல் இடத்தில் நுழைந்தது ஏன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள். என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com