ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற மியான்மர் அரசு திட்டம்

வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற மியான்மர் அரசு திட்டமிட்டு உள்ளது.
ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற மியான்மர் அரசு திட்டம்
Published on

டாக்கா,

மியான்மரில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 5லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்து உள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் மியான்மரின் சூ கி அரசு கடும் விமர்சனத்தை உலக அரங்கில் எதிர்க்கொண்டு உள்ளது.

ரோஹிங்யா விவகாரம் ஐ.நா.சபையில் எழுப்பட்ட போது, சூ கி அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் ரோஹிங்யாக்களை திரும்ப பெற தயார் என கூறினார். ரோஹிங்யாக்களை திரும்ப பெற வேண்டும் என இந்தியா, வங்காளதேசம் தொடர்ந்து வலியுறுத்தியது.

இப்போது வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற மியான்மர் அரசு முன்வந்து உள்ளது.

வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஏ எச் முகமத் அலி, மூத்த மியான்மர் அரசு அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறுவதாக மியான்மர் முன்மொழிந்து உள்ளது. இணக்கமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது, மியான்மர் அரசு ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறுவதாக முன்மொழிந்து உள்ளது, என குறிப்பிட்டு உள்ளார் ஏ எச் முகமத் அலி. இருப்பினும் முழு விபரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். ரோஹிங்யா அகதிகளை மீண்டும் ராகினேவில் குடியமர்த்தும் பணியில் இரு நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்த குழுவை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது.

இந்த கூட்டு குழுவால் ரோஹிங்யா அகதிகள் விவகாரம் ஆய்வு செய்யப்படும், இதில் ஐ.நா. அமைப்பு ஈடுபடாது என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com