116 பயணிகளுடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
116 பயணிகளுடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்
Published on

யாங்கூன்,

116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மியான்மரின் தெற்கு நகரான மியேக் -யாங்கூன் இடையே விமானம் மாயமாகி இருப்பதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானம் புறப்பட்டு 20 மைல்கள் சென்ற பிறகு அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.35 மணியளவில் திடீரென விமானத்தினுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ராணுவ தளபதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தமான் கடல்பகுதி மேலே விமனம் பறந்து சென்ற போது மாயமாகி இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 105 பயணிகளும் 11 சிப்பந்திகளும் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com