ரஷ்யாவில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்

ரஷ்ய பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி மர்ம மரணம் அடைந்து உள்ளார்.
ரஷ்யாவில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்
Published on

வாஷிங்டன்,

ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் கேத்தரீன் செரவ் (வயது 34). அமெரிக்காவை சேர்ந்தவரான செரவ் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி கடந்த வியாழ கிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். நான் கடத்தப்படவில்லை என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

எனினும், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் செல்போன் அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது. இதுபற்றி 40 வயதுடைய நபர் ஒருவரை விசாரணை குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com