

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் விரைவுசாலை அருகே 2 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டனர். முன்பகையால் இது நடந்திருக்க கூடும் என போலீசார் செய்தியாளர்களிடம் கூறினர். அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப காலங்களாக அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்நாட்டின் தென்மேற்கே நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் சோதனை சாவடியில் நடந்த தாக்குதல்களில் 5 பாகிஸ்தானிய வீரர்கள் மற்றும் 13 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.