10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு வடகொரியா புளூட்டோனியத்தை வைத்துள்ளது: தென் கொரியா

10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு வடகொரியா புளூட்டோனியத்தை வைத்துள்ளது என்று தென் கொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு வடகொரியா புளூட்டோனியத்தை வைத்துள்ளது: தென் கொரியா
Published on

சியோல்,

கண்டம் விட்டு கண்டம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த தயார் நிலையில் இருப்பதாக வடகோரியா தெரிவித்து இருந்த நிலையில், அந்நாட்டிடம் 10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு புளுட்டோனியம் இருப்பதாக தென் கொரியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

பன்னாட்டு தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதுவரை 5 முறை அணு ஆயுத சோதனைகளையும், பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உள்ள வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் தனது நடவடிக்கைகளை வடகொரியா கைவிடுவதில்ல்லை.

இந்த நிலையில், வடகொரியாவிடம் 10 அணு குண்டுகள் தயாரிக்க கூடிய அளவுக்கு புளூட்டோனிய இருப்பதாக தென்கொரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் இது பற்றி கூறும் போது, வடகொரியாவிடம் 2016-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் 10 கிலோ அளவுக்கு புளூட்டோனியம் இருந்தது.

இதை வைத்து 10 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். 8 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ அளவுக்கு வைத்திருந்தது. இதேபோல் மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கும் திறனை வட கொரியா பெற்றிருக்கிறது. ஆனால், ஆயுத தயாரிப்பு யுரேனியம் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com