குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள்... பெற்றோருக்கு இப்படியொரு உத்தரவிட்ட நாடு..!!

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு உத்தரவிட்ட நாடு மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள்... பெற்றோருக்கு இப்படியொரு உத்தரவிட்ட நாடு..!!
Published on

பியாங்யாங்,

வடகொரியா நாடு தனது நாட்டு மக்களுக்கு தேசப்பற்றை வளர்க்கும் என்ற அடிப்படையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. இதுபற்றி தி மிர்ரர் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் மற்றும் விசுவாசம் போன்ற பெயர்களை சூட்ட வேண்டும் என வடகொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்ற பல பெயர்களை அவர்கள் அறிவித்து உள்ளனர். இந்த பெயர்கள் எல்லாம், தேசப்பற்றை மக்களிடையே வளர்க்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு, 'அன்புக்குரிய ஒருவர்', 'பேரழகு' என தென்கொரியா நாட்டில் உபயோகித்தது போன்ற அன்பு சார்ந்த பெயர்களை வடகொரியா அனுமதி அளித்திருந்தது.

எனினும், இனி இந்த பெயர்களை சூட்ட ஊக்கமளிக்கப்படாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு, இதுபோன்ற அன்புக்குரிய பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பின், உடனடியாக அவற்றை தேசப்பற்று நிறைந்த பெயர்களாக பெற்றோர்கள் மாற்ற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அரசின் இந்த உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பெற்றோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com