

பெஷாவர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கான் மாவட்டத்தில் தராபன் காலன் பைபாஸ் சாலையில் வாகனம் ஒன்றில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிகளுடன் திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் வாகனத்தில் இருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோனர்.
இந்த தாக்குதலில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறையை சேர்ந்த 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கான் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.