சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட மேகங்களின் அழகிய புகைப்படங்கள்

விண்வெளி வீராங்கணையால் விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட மேகங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட மேகங்களின் அழகிய புகைப்படங்கள்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கணை கெய்லா பரோன். இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் விண்ணில் இருந்துகொண்டே பூமியின் அழகிய புகைப்படங்களையும், மேகக்கூட்டங்களின் புகைப்படங்களையும் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவர் கடந்த 1 ஆம் தேதி விண்ணில் இருந்து எடுத்த பூமியை சுற்றியுள்ள மேகக்கூட்டங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் "விண்வெளியில் இருந்து மேகங்களின் புகைப்படங்களைப் பார்ப்பதில் நீங்கள் சோர்வடையவில்லை என்று நம்புகிறேன், ஏனெனில் அவற்றை எடுப்பதில் நான் இன்னும் சோர்வடையவில்லை என்று எழுதி பதிவிட்டு இருந்தார்.

தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உங்கள் பார்வையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி எனக்கூறி இணையவசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com