ஈராக்கில் இருந்து நேட்டோ ஆலோசனை குழு வெளியேறியது

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் பிடியில் இருந்து விடுவிக்க தங்களது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கேட்டது.
ஈராக்கில் இருந்து நேட்டோ ஆலோசனை குழு வெளியேறியது
Published on

ஈரான்,

ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் பிடியில் இருந்து விடுவிக்க தங்களது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கேட்டது. ஆனால் எந்த நாடும் முழு ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ், பிரெஞ்ச், இத்தாலிய ராணுவ தளங்களில் இருந்த துருப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரானின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து இங்கு இயங்கி வந்த நேட்டோ அமைப்பின் ஆலோசனை குழு அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. அதன் கடைசித் துருப்பு நேற்று வெளியேறிவிட்டதாக நேட்டோ உயர்மட்ட தளபதி அறிவித்தார். அவர்கள் பாதுகாப்பாக ஐரோப்பாவுக்கு இடம் மாற்றியதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவானது போர் சாரா அமைப்பாகும். இது ஈராக் அதிகாரிகளுக்கு கட்டமைப்பை உருவாக்குவது, படைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்தது. இனி இந்த ஆலோசனைக்குழு இத்தாலியின் நோபிள் நகரில் உள்ள நேட்டோவின் தலைமையகத்தில் இருந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com