நேட்டோ நாடுகள் கோழைகள்; வெறும் காகித புலி: டிரம்ப் விமர்சனம்

இனி நேட்டோ நாடுகள் உதவி தங்களுக்கு தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகள் கோழைகள்; வெறும் காகித புலி: டிரம்ப் விமர்சனம்
Published on

வாஷிங்டன்,

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியிருப்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். 7 நாடுகளை கேட்டுக்கொண்டதாக அவர் கூறினாலும் எந்தெந்த நாடுகள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

ஆனால் ஹார்முஸ் நீரிணைக்கு கப்பல் அனுப்பாமல் பல நாடுகள் கைவிரித்து விட்டன. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்காவின் கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றுக்கொண்டு, அமெரிக்காவுக்குத் தேவைப்படும்போது அந்நாடுகள் ஒதுங்கிக்கொள்வதே வழக்கம் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா ஏற்கனவே மிகப்பெரிய ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதால், இனி தங்களுக்கு நேட்டோ நாடுகள் உதவி தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில், நோட்டோ நாடுகள் மீது மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது, ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவாத நோட்டோ நாடுகள் கோழைகள் எனவும், இதை என்றும் அமெரிக்கா நினைவில் வைத்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா இல்லையென்றால், நோட்டோ வெறும் காகிதப் புலிதான். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்வொய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முன் நீரிணைலை திறக்க உதவ மறுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com