ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: கடற்படை தாக்குதலுக்கு டிரம்ப் திட்டம்?

ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது என்று தகவல் கிடைத்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: கடற்படை தாக்குதலுக்கு டிரம்ப் திட்டம்?
Published on

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில்,

ஈரானுக்கு அமெரிக்கா எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒரு கடற்படை முற்றுகை உத்தியை விளக்கும் ஒரு கட்டுரையை பகிர்ந்து உள்ளார். இதன் மூலம் ஈரான் மீது கடற்படை தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைதான் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் ஈரானுக்கு சீனா ஆயுத உதவியை செய்ய உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப சீனா தயாராகி வருவதாக செய்தி கிடைத்து உள்ளது. அதுபோன்று சீனா செய்தால் அந்நாடு பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com