நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி

பஸ் விபத்து அதிகாலை 2 மணி அளவில் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி
Published on

காத்மண்டு,

நேபாளத்தில் இன்று அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் பயணிகள் 18 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 பெண்கள் 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் சுக்கு நூறாக உடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com