

காத்மாண்டு,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேரின் நேபாள குடியுரிமையை அந்நாட்டு அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அவர்கள் அனைவரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து குடியுரிமை பெற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியுரிமை ரத்து செய்யப்பட்ட அந்த 8 நபர்கள் அசோக் ஷா, பிந்தே மஹதோ, தனாதேவி மஹதோ, சுஷில் மஹதோ, ராஜேஷ்வர் மஹதோ, ராம்கிஷோர் மஹதோ மற்றும் ராஜ்குமார் மஹதோ ஆகியோர் ஆவர்.
இது குறித்து நேபாளத்தின் ராஷ்டிரிய ஜனதா கட்சியின் கூட்டு பொதுச்செயலாளர் ராகேஷ் மிஷ்ரா கூறியபோது, இதுபோன்ற முடிவுகள் எடுக்கும் முன்னர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். போலி ஆவணங்களை பெற்றுக் கொண்டு குடியுரிமை வழங்கிய அதிகாரிகளை தண்டிக்காமல் குடியுரிமை பெற்றவர்களை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்றார்.