செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் வசதி நேபாளுக்கு அவசியம் தேவை - தூதர் தீப் குமார்

நேபாள நாட்டில் தேங்கிப்போயிருக்கும் இந்தியாவின் செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட ரூ 1000, 500 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வசதி வேண்டும் என்று அதன் தூதர் கோரினார்.
செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் வசதி நேபாளுக்கு அவசியம் தேவை - தூதர் தீப் குமார்
Published on

புது டெல்லி

இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை இந்தியாவிடம் நடத்தி விட்டதாகவும் அவர் கூறினார். அதன் விளைவாக ஒரு உடன்பாடு ஏறக்குறைய எட்டப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். நேபாளத்தின் பக்கமிருந்து ஒவ்வொரு கணக்கிற்கும் ரூ, 25,000 இட வசதி வேண்டும் என்று கேட்கப்பட்டது, இந்தியா ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ. 4,500 ஐ மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அதன் தூதர் தீப் குமார் உபாத்யாய்.

நேபாளத்தின் மலையகப் பகுதியில் வசிக்கும் மக்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் யாரேனும் ஒருவர் இந்தியாவில் பணி புரிந்து வருவார். அது தவிர ஓய்வூதியம் பெறுவோர், இந்தியாவிலிருந்து பணம் கொண்டு வருவோர் என பல தரப்பாருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனது கடமையாகும்.

கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக இரு நாட்டு மைய வங்கிகளும் ஓர் வழிமுறையை ஏற்படுத்தும் என்று அருண் ஜெட்லி கூறியிருந்தார். நேபாளத்தின் இந்திய எல்லையோர பகுதிகளிலும் இந்திய ரூபாய்கள் அதிகளவில் புழக்கத்திலுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com