நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி

கொரோனா தொற்று அதிகரித்த போது விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி
Published on

காத்மாண்டு,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை நேபாளம் நிறுத்தி வைத்தது. அதேபோல், உள்நாட்டிலும் பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதையடுத்து, சர்வதேச விமான போக்குவரத்தை நாளை முதல் அனுமதிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகள் பின்பற்றியே சர்வதேச விமான போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com