புதிய வரைபடத்தை ஐநா உள்பட சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் முடிவு

இந்தியாவுக்கு சொந்தமான சில பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை நேபாள அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
புதிய வரைபடத்தை ஐநா உள்பட சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் முடிவு
Published on

காத்மாண்டு,

இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் நேபாளம் உரிமை கொண்டாடியது. அதோடு, இந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் கடந்த மே மாதம் வெளியிட்டது. நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒரு தலைபட்சமான நடவடிக்கை எனவும் வரலாற்று பூர்வமாக எந்த ஆதாரங்களும் இன்றி நேபாளம் தன்னிச்சையாக செயல்படுவதாக இந்தியா கடுமையாக சாடியது.

இந்த நிலையில், மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை இந்தியா உள்பட ஐக்கிய நாடுகள் அவை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு விரைவில் அனுப்ப இருப்பதாக நேபாள மந்திரி தெரிவித்துள்ளர். இந்த மாத நடுவில் இதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று நேபாள மந்திரி பத்ம ஆர்யால் தெரிவித்துள்ளார். இதற்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைபடத்தில் 4 ஆயிரம் பிரதிநிதிகள் எடுக்கவும் நேபாள அரசு முடிவு செய்துள்ளது. கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்களுக்கும் இந்த வரைபடத்தை அனுப்ப நேபாளம் முடிவு செய்துள்ளது.

நேபாளத்தின் புதிய வரைபடம் ஏற்கனவே அந்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாகண அலுவலங்கள் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் இலவசமாக நேபாளம் அரசு வழங்கியிருக்கிறது. நேபாள மக்களுக்கு நேபாள ரூபாயில் 50-க்கும் புதிய வரைபடத்தை விற்பனை செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com