நேபாள தலைநகர் காட்மாண்டுவில் குண்டுவெடிப்பு; ஒருவர் சாவு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் குண்டுவெடிப்பு; ஒருவர் சாவு
Published on

காட்மாண்டு,

நேபாள தலைநகர் காட்மாண்டுவின் புறநகர் பகுதியான லலித்பூரில் மலேசியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

இதில் சிக்கிய ஒருவர் உடல் சிதறி பலியானார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்மாண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com