

ஜெருசலேம்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் மீதான தாக்குதல், மத்திய நிலவி வரும் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.