அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளா. #DonaldTrump #WhiteHouse
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு: அதிபர் டிரம்ப் அதிரடி
Published on

வாஷிங்டன்,

புளோரிடா மகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் நாடெங்கும் துப்பாக்கி உபயோகத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளா.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் பள்ளிக்கூடத்தில் 19 வயதான முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ், கடந்த 14ந் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. துப்பாக்கி கலாச்சாரம் நாடெங்கும் பரவுவதை எண்ணி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நாட்டு மக்களும், மாணவர்களும் நாட்டின் பல இடங்களில் துப்பாக்கி உபயோகத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கி உபயோகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். இதன் முறையே, புதிதாக துப்பாக்கி வாங்குவோர்களின் முழு பின்னணி விவரங்கள் அறிந்த பிறகே அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com