

அட்லாண்டிக் சிட்டி,
மீளா நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள், மருத்துவர்களின் அனுமதியுடன் தற்கொலை செய்ய அனுமதி அளிக்கும் சட்டம் அமெரிக்காவின் சில மாகாணங்களில் அமலில் உள்ளது. இந்த நிலையில், மருத்துவ உதவியுடன் தங்கள் வாழ்க்கையை முடிக்க அனுமதிக்கும் சட்டத்திற்கு நியூஜெர்சி மாகாண அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. நியூஜெர்சி மாகாண செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா பெரும்பாலான செனட் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம், தீராத கொடிய நோயால் அவதிப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முடியும். இந்த சட்டம் அமல்படுத்தப்படும் முன் நோயாளிகள் நல்ல மனநிலையில் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே, கலிபோர்னியா, வாஷிங்டன், ஹவாய், மோண்டனா உள்ளிட்ட 7 மாகாணங்கள் மருத்துவர்களின் உதவியுடன் தற்கொலை செய்ய அனுமதிக்கிறது.