கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு

கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
Published on

லண்டன்,

கொரோனாவை தடுப்பதற்காக இப்போது உருவாக்கி, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிற தடுப்பூசிகள் பலவும் இரட்டை டோஸ் தடுப்பூசிகள் ஆகும். அதாவது இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மறுமுறையும் போட வேண்டும். இதனால் ஒருவர் 2 முறை தடுப்பூசி போட நேரிடும்.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை டோஸ் தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ஸ்பைக் புரோட்டின் மரபணு வரிசையை மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசியில் செலுத்தி, இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசிக்கு ரெகாவேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவை வெள்ளெலிகள் மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி சோதித்ததில் அது கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த கட்டமாக இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு விஞ்ஞானிகள் தயாராகி வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com