கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய உத்தி ஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய உத்தியாக, ஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய உத்தி ஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு
Published on

டோக்கியோ,

ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்குமுக்காடி போகிறது.

இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய உத்தியை கையாள முடிவு செய்திருக்கிறது. ஆதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 முதல் 3000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com