நியூயார்க்கில் தாக்குதல் நடத்தியவர், தங்கள் இயக்கத்தைச்சேர்ந்தவர் என்று ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் அறிவிப்பு

நியூயார்க்கில் தாக்குதல் நடத்தியவர், தங்கள் இயக்கத்தைச்சேர்ந்தவர் என்று ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
நியூயார்க்கில் தாக்குதல் நடத்தியவர், தங்கள் இயக்கத்தைச்சேர்ந்தவர் என்று ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கீழ்மேன்ஹட்டன் பகுதியில் கடந்த 31-ந்தேதி பாதசாரிகள் மீது லாரியை ஏற்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சைபோவ் என்ற பயங்கரவாதியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்காக இந்த கொடூர தாக்குதலை அவர் அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவான அல் நபா என்ற வார இதழும், தாக்குதல் நடத்தியவர் தங்கள் இயக்கத்தின் வீரர் என கூறி மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com