விண்வெளி பந்தயத்தில் இந்தியாவுக்கு சிறப்பான இடம்: அமெரிக்க பத்திரிகை பாராட்டு

விண்வெளி பந்தயத்தில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

வாஷிங்டன்,

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ பல மைல்கல் சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளி திட்டங்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசிய பிறகு விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் புதிய எல்லைகளை அடைய இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமெரிக்க பத்திரிகை பாராட்டு

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை வெகுவாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'உலகின் விண்வெளி வணிகத்தில் வியக்க வைக்கும் முயற்சியாளர்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1963-ல் தனது முதல் ராக்கெட்டை ஏவியபோது, உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் ஏழை நாடாக இந்தியா இருந்தது.

இந்தியாவின் முதல் ராக்கெட் ஒரு சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்து சென்று விண்ணில் ஏவப்பட்டது.

இன்றைய விண்வெளிப் பந்தயத்தில் இந்தியா மிகவும் உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா குறைந்தது 140 பதிவு செய்யப்பட்ட விண்வெளி-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாயகமாக மாறியுள்ளது.

சீனாவுக்கு எதிர் சக்தியாக...

ஒரு விஞ்ஞான சக்தியாக இந்தியாவின் முக்கியத்துவம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் விண்வெளியை ஒரு களமாக பார்க்கின்றன. அதில் இந்தியா தங்கள் பரஸ்பர போட்டியாளரான சீனாவுக்கு எதிர் சக்தியாக வெளிப்பட முடியும். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி விண்வெளித் துறைக்கான உத்வேகத்தை அறிவித்தபோது, அனைத்து வகையான தனியார் நிறுவனங்களுக்கும் அதைத் திறந்து, இந்தியா வணிகங்களின் வலையமைப்பைத் தொடங்கியது. கடந்த ஆண்டு, விண்வெளி தொடக்கம் புதிய முதலீட்டில் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு இரட்டிப்பு அல்லது மும்மடங்காகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com