நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது
Published on

ஆக்லாந்து,

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (வயது 37). இவரது கணவர் கிளார்க் கேபோர்டு. மிக குறைந்த வயதில் பிரதமரானவர்களில் ஒருவரான ஜெசிந்தா ஆக்லாந்து நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பதவியில் உள்ளபொழுது குழந்தை பெற்ற உலக தலைவர்களில் 2வது நபராக இவர் இருக்கிறார்.

கடந்த 1990ம் ஆண்டு மறைந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ பதவியில் இருந்தபொழுது தனது பெண் குழந்தையை பெற்றார். ஆர்டெர்னின் மகளை போன்றே பூட்டோவுக்கும் இன்று பிறந்த நாள் ஆகும்.

இதுபற்றி ஆர்டெர்ன் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், புதிய பெற்றோர் உணரும் அனைத்து உணர்ச்சிகளின் வழியேயும் நாங்கள் செல்கிறோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேநேரத்தில், பலரின் அன்பு மற்றும் வாழ்த்துகள் ஆகியவற்றிற்காக நன்றியுள்ளவளாகவும் நான் உணருகிறேன். நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஆர்டெர்ன் 6 வார விடுப்பில் செல்கிறார். இதனால் நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்திடுவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com