அடுத்த மாதம் 28-ந் தேதி விண்வெளியில் நடக்கிறார்கள், அமெரிக்க வீரர்கள்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த மாதம் 28-ந் தேதி விண்வெளியில் நடக்கிறார்கள், அமெரிக்க வீரர்கள்
Published on

மாஸ்கோ,

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படுகிறபோது அல்லது அதன் தளவாடங்களை மாற்றி அமைக்க வேண்டியபோது அல்லது பிற பணிகளின் போது, அதனுள் தங்கி இருக்கிற வீரர்கள் வெளியே வருவார்கள். விண்வெளியில் நடப்பார்கள். அப்போது அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு, மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றுவிடுவார்கள். இது வழக்கமான நடைமுறை.

இந்த நிலையில், அடுத்த மாதம் 28-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்கிற விண்கலங்கள் இறங்குவதற்கான இரண்டாவது தளத்தை அமைக்கிற பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com