சவுதி அரேபியா மீது ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் ஐ.நா அமெரிக்க தூதர்

சவுதி அரேபியாவின் ரியாத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியா மீது ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் ஐ.நா அமெரிக்க தூதர்
Published on

நேற்று மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை குறித்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஏமனிலிருந்து நடத்தப்பட்டது. இதனை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அல் மாசிரா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரானின் குற்றங்களை அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் ஒரு மோசமான பிராந்திய மோதலுக்கு ஈரான் வித்திடும் என தெரிவித்துள்ளார்.ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com