கஜகஸ்தான் ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 9 பேர் பலி எனத்தகவல்

கஜகஸ்தான் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜகஸ்தான் ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 9 பேர் பலி எனத்தகவல்
Published on

நுர் சுல்தான்,

கஜகஸ்தான் நாட்டின் ஜம்லி மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தால் சேமிப்பு அறையில் தீப்பற்றியது. தீ ராணுவ தளத்தின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இந்த வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com