சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில் தீ விபத்து; 9 பேர் பலி

சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். #Fireaccident
சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில் தீ விபத்து; 9 பேர் பலி
Published on

பெய்ஜிங்,

சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் குயிங்யுவான் நகரில் கழிவுகள் பதப்படுத்தும் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற விவரங்கள் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com