லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஜாமின் மனு தாக்கல்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஜாமின் மனு தாக்கல்
Published on

லண்டன்,

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்ற வழக்கில், இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர். லண்டன் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5வது முறையாக ஜாமீன்கேரி நிரவ் மேடி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மன அழுத்தத்தல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் கேரியுள்ளார். இம்மனு, அடுத்த மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேரி நிரவ் மேடி 4 முறை மனு தாக்கல் செய்தார். அந்த மனு 4 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com