

நியூயார்க்,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய தம்பி நெஹல் மோடி. அவர் பெல்ஜியம் நாட்டில் 1979ம் ஆண்டு பிறந்தவர்.
கடந்த 2015ம் ஆண்டு, அவர் அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரில் உள்ள எல்.எல்.டி. டயமண்ட்ஸ் என்ற கம்பெனியிடம் பொய் தகவல்கள் அடிப்படையில் ரூ.19 கோடி மதிப்புள்ள வைரங்களை பெற்று மோசடி செய்தார்.
இதுதொடர்பாக, நெஹல் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு விசாரணை, நியூயார்க் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அங்கு அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.