சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை - வடகொரியா

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.
சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை - வடகொரியா
Published on

பியாங்யாங்,

சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என சீனாவின் நெருங்கிய நட்பு நாடான வடகொரியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டு அமைச்சகம் சீன ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் வடகொரியாவுக்கு எதிரான விரோத சக்திகளின் நகர்வுகள் மற்றும் உலகளாவிய தொற்றுநோய் காரணமாக நாங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அருமையான மற்றும் அற்புதமான ஒலிம்பிக் திருவிழாவை நடத்த சீன தோழர்களின் அனைத்து பணிகளையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றம்சாட்டி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக, அதாவது, அரசு அதிகாரிகளை அனுப்பாமல், விளையாட்டு வீரர்களை மட்டும் அனுப்ப உள்ளதாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com