ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை: டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்றார் ஜின் பிங்

ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறந்துவிடுவது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை: டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்றார் ஜின் பிங்
Published on

வாஷிங்டன்,

டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறந்துவிடுவது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நான் இதை சீனாவுக்காகவும்,அத்துடன் உலகத்திற்காகவும் செய்கிறேன். இது போன்ற நிலை இனி ஒருபோதும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று சீனா ஒப்புக்கொண்டுள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் நான் அங்கு செல்லும்போது, சீன அதிபர் ஜின் பிங் எனக்கு ஒரு பெரிய, அன்பான தழுவலை அளிப்பார். நாங்கள் மிக சிறப்பாகவும், மிகுந்த அறிவுக்கூர்மையுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மேலும் சண்டையிடுவதை விட இது எவ்வளவோ மேலானது அல்லவா? ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: தேவைப்பட்டால், சண்டையிடுவதிலும் நாங்கள் மிக சிறந்தவர்கள் - மற்றவர்களை விட மிக சிறந்தவர்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com