அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை: டிரம்ப் அறிவிப்பு

பொருளாதாரம் மற்றும் ராணுவம் என்ற அடிப்படையில், ஈரானின் நிலைமை மோசமடைந்து உள்ளது.
டிரம்ப்
Published on: 

நியூயார்க்

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் ஏறக்குறைய 8 மாதங்களாக நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதனால், உலக அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வந்தது. மேற்காசிய பகுதியில் பதற்றம் சற்று தணிந்தது. ஆனால், இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டன.

டிரம்ப் அறிவிப்பு

இந்த நிலையில், அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், ஈரானுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனை நடத்தினோம். உங்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பொருளாதாரம் மற்றும் ராணுவம் என்ற அடிப்படையில், ஈரானின் நிலைமை மோசமடைந்து உள்ளது.

அதனால், அமெரிக்காவில் நவம்பர் 3-ந்தேதி இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com