ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது - தலீபான்கள் திட்டவட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது - தலீபான்கள் திட்டவட்டம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தலீபான் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியதாவது:-

அமெரிக்க படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம். ஆகஸ்டு 31-ந் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும், தலீபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்று எனக்கு தெரியாது. நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com