தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை: பிஜி அரசு அறிவிப்பு

ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரசை அழிக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை: பிஜி அரசு அறிவிப்பு
Published on

ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளன. இன்னும் சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களை தடுப்பூசி போடுவதற்கு வற்புறுத்தி வருகிறது. அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை என அந்த நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவித்துள்ளார்.

ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1-ந்தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com