எங்களுக்கு யாரும் உத்தரவு போட முடியாது: சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆவேசம்

எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் யாரும் இல்லை என அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்து சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேசியுள்ளார்.
எங்களுக்கு யாரும் உத்தரவு போட முடியாது: சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆவேசம்
Published on

பெய்ஜிங்,

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனாவும் அதிகரித்தது. இவ்வாறாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதற்கு மத்தியில், அண்மையில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்து பேசினர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் புதிய வரி விதிப்புகளை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்பு கொண்டுள்ளன.

இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு வரிகள் விதிக்க போவதில்லை என ஒப்பு கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை மேலும் தொடரும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்த சூழலில், நாங்கள் (சீனா) என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று யாரும் எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியதாவது:- சமுத்துவம் என்ற பெரிய அடையாளமானது சீன மண்ணில் எப்போதும் உச்சத்தில் இருக்கும். சீன மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் யாரும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com