கடுமையாக சேதமடைந்த சீன விமானம்; 36 மணி நேரத்தை கடந்த மீட்புப்பணி - இதுவரை உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை!

விமானத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையாக சேதமடைந்த சீன விமானம்; 36 மணி நேரத்தை கடந்த மீட்புப்பணி - இதுவரை உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை!
Published on

பீஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடைபெற்ற தெற்கு சீனாவில் மீட்புக்குழுவினர் உயிர் பிழைத்தவர்களை தேடு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்டு சுமார் 36 மணிநேரம் தாண்டிவிட்டது. இதற்கு பின் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், விமானத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com