உலகைச் சுற்றி...

*அமெரிக்காவில் திடீரென காணாமல் போன நோபல் பரிசு பெற்ற ஜப்பான் விஞ்ஞானி எய் இச்சி நெகிஷின் மனைவி பிணமாகவும், அவர் சாலையில் நிராதரவராகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
உலகைச் சுற்றி...
Published on

* பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து பிரதமர் பதவி பறிக்கப்பட காரணமான பனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பனாமா சட்ட நிறுவனம் மூடப்பட்டு விட்டது.

* சுலோவானியா நாட்டின் பிரதமர் மிரோ செரார் பதவி விலகி விட்டார். அந்த நாட்டின் அரசு நடத்திய கருத்துக்கணிப்பு செல்லாது என கோர்ட்டு தீர்ப்பு அளித்ததே அவரது பதவி விலகலுக்கு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

* காலணி வீச்சுக்கு ஆளான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், அங்கு உள்ள குஜராத் மாகாணத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் என் மீது காலணி வீச விரும்பினால் வீசலாம். நான் தயார். நீங்கள் வீசுங்கள். நான் நன்றாக கேட்ச் பிடிக்கிறவன். நீங்கள் வீசும் காலணியை பிடித்து உங்கள் மீதே திருப்பி வீசுவேன் என பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

* நோபல் பரிசு பெற்ற ஜப்பான் விஞ்ஞானி எய் இச்சி நெகிஷி அமெரிக்காவில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர்கள் திடீரென காணாமல் போனார்கள். இப்போது அவரது மனைவி பிணமாகவும், அவர் சாலையில் நிராதரவாய் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எப்படி அவர்களுக்கு இந்த நிலை நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com