இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு


இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
x

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும். அதன்படி ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் என நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்கு பார்வைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி குழு ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பார்ஸ்ஸாலனில் இலக்கியத்திற்கு நோபல் பரிசை அறிவித்தது.

1 More update

Next Story